உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜனவரி 10, 2008

ஆ(வ்)ஸ்திரேலியாவும் அம்பையரும்

இந்திய கிரிக்கெட் அணியின்   ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அடுத்து வரப்போகும் சில ஆட்டங்களின் நிலை குறித்த பரபரப்பான காட்சிகள்.. 

 

 

என்னப்பா எட்டு பேர் தான் அவுட் ஆகியிருக்காங்க..? ஆல் அவுட்னு அம்பையர் கிளம்ப சொல்றார்?

 

ஷ்.. இது ஆஸ்திரேலியா மறந்து போச்சா? கத்தி பேசாத... பைன் போட்டுருவாங்க...

 

===================================================

 

சார் மணி மத்தியானம் பதினொன்னு தான் ஆகுது.. சூரியன் சுள்ளுன்னு அடிக்குது.. ஒரு விக்கெட் தான் இருக்கு.. அஞ்சு ஓவர் போட்டா ஆல் அவுட் ஆகிடுவாங்க... பேட் லைட்னு(BAD LIGHT) ஆட்டத்தை கேன்சல் பண்றீங்க... ?

 

ஆமாய்யா கண்ணு கூசுற அளவுக்கு வெயில் அடிச்சா அது பேட் லைட் தானே? நான்சென்ஸ்...

 

===================================================

 

இவர் இப்ப தானே அவுட் ஆனார்? மறுபடி ஆட வர்றார்?

 

அவர் கருப்பினத்தை சேர்ந்தவர்னு தானே அவர் ஆட கூடாqதுன்னு பிரச்சினை பண்றீங்க? யூ ஆர் சஸ்பெண்டட் ஃபார் 3 மேட்சஸ்....

 

====================================================

 

என்னப்பா என்ன பிரச்சினை?

 

ஆஸ்திரேலியா கேப்டன் அவங்க போலர்ஸ் ஸ்டம்புக்கு போடற பந்தையெல்லாம் இந்தியா பேட்ஸ்மேன் பேட்டால தடுத்துடறாங்கன்னு கம்பிளெயின்ட் பண்ணிட்டிருக்கிறாராம்...

 

 

=====================================================

 

அம்பையர் சார் சொன்னா நம்புங்க சார்.. ஸ்டேடியத்த விட்டு பால் வெளிய போனா அது சிக்சர் தான் சார்.. ஸ்டேடியத்தை விட்டு பந்தை வெளிய அடிச்சா அவுட்டுன்னு எப்போ ரூலை மாத்தினாங்க...

 

 

=======================================================

 

என்னயா டென்ஷனா இருக்கே?

 

என்னய்யா அநியாயமா இருக்கு... உணவு இடைவேளை முடிஞ்சு பேட்ஸ்மேன் உள்ளே வந்துட்டு இருந்தாங்க. க்ரீசுக்கு வரதுக்குள்ள ரெண்டு பேரையும் ரன் அவுட் பண்ணிட்டாங்க...

 

=========================================================

 

ஆனாலும் நம்ம ராமசாமிக்கு ரொம்ப நக்கல்...

 

எப்படி சொல்றே?

 

பேசாம அம்பையர்களுக்கும் ஆஸ்திரேலியா டீம் யுனிபார்ம் போட்டு விட்டுருங்கன்னு நக்கல் அடிக்கிறார்...

 

==========================================================

ஏன் நம்ம டீம் கேப்டன் கலங்கி போய் இருக்கார்?

 

அவர் அடிச்ச பந்தை அம்பையரே கேட்ச் பிடிச்சுட்டு அவுட்டும் கொடுத்துட்டாராம்...

 

==========================================================

புலம்பல் பித்தனின் மேடைப்பேச்சு

சில நாட்களுக்கு முன்பு வந்த ஒரு பட விழாவில் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வதை கண்டித்து புலமைப்பித்தன் சில கடுமையான வார்த்தைகளை கூறியிருந்தார். ரீமிக்ஸ் செய்த இசையமைப்பாளர்கள் மீது வழக்கு தொடுப்போம் என்றும் சாவிற்கு பாடும் ஒப்பாரி பாடல்களுக்கு இணையாக ரீமிக்ஸ் பாடல்களை ஒப்பிட்டு பேசியிருந்தார்.

 

1. பழைய பாடல்களை ரப்பர் தேய்த்து அழித்த பின்பு தான் ரீமிக்ஸ் பாடல்கள் பாட முடியும் என்றால் அய்யோ போயிற்றே என்று பதறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. பழைய பாடல்கள் அப்படியே தானே அய்யா இருக்கிறது. அதை கேட்க விரும்புபவர்கள் கேட்டு கொள்ளட்டுமே....

 

2. ரீமிக்ஸ் பாடல்களை கேட்க ரசிகர்கள் இருப்பதால் தானே, அந்த மாதிரி பாடல்களுக்கு வரவேற்பு இருப்பதால் தானே ரீக்ஸ் பாடல்கள் வருகின்றன? அந்த ரசிகர்களின் ரசனையை குறை கூற புலமைப்பித்தனுக்கோ அல்லது எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது...

 

3. புலமைப்பித்தனுக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல உரிமை இருக்கிறது... அது சரியா, தவறா என்று சொல்ல உரிமை இல்லை.....

 

4. கர்நாடக சங்கீதம் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த காலத்தில், மெல்லிசை பாணி இசையை திரையுலகில் புகுத்திய K.V. மகாதேவன், மேற்கத்திய இசையை புகுத்திய விஸ்வநாதன் ராமமூர்த்தி காலத்தில் அதை செய்ய அவர்களுக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமையும் சுதந்திரமும் இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் அளிக்க பட வேண்டும்.

 

5. பாபநாசம் சிவனும் மற்றும் பல பழந்தமிழ் நாடக இசை திரை கலைஞர்கள் கடும் தமிழில், தெள்ளு தமிழில் இசையை பாடல்களை உருவாக்கி கொண்டிருந்த போது கண்ணதாசனும் இன்று எகிறி கொண்டிருக்கும் சில கவிஞர்களும், எளிய தமிழில் திரைப்பாடல்களை எழுதவில்லையா? உங்களுக்கு யார் கொடுத்து அந்த உரிமை?

அதே உரிமை இன்றைய இளந்தலைமுறை கவிஞர்களுக்கும் வேண்டும்....

 

6. அது என்னய்யா எப்போ பழைய பாடல்களையும் புது பாடல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது பழைய நல்ல பாட்டுக்களையும் , புது பாடல்கள்ல இருக்கிறதுலேயே கெட்ட பாட்டாவும் பார்த்து தேர்ந்தெடுத்து ஒப்பிட்டு பார்த்து குறை சொல்றீங்க...?

 

நீங்க எல்லாம் என்ன அந்த காலத்துல காசு வாங்காம ப்ரீ செர்வீசா பண்ணீங்க? இலந்தைப்பழம் பாட்டு, என்னடி முனியம்மா இதெல்லாம் என்ன பெரிய இலக்கிய சிந்தனையா? இதெல்லாம் பழைய பாட்டு தானே?

 

புது பாடல்கள்ல ஒவ்வொரு பூக்களுமேன்னு பாட்டு வரலையா? இல்ல சுற்றும் விழி சுடர்னு ரெஹ்மான் பாரதி பாட்டுக்கு இசை அமைக்காமலயா?

 

எல்லா காலத்துலயும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அந்த காலத்துல சரோஜா தேவி பத்திரிகைன்னா இந்த காலத்துல வெப் சைட்டு.. அதுக்காக எல்லா பெரியவங்களும் அதை படிச்சாங்கன்னு சொல்ல முடியுமா?

 

7. ரீமிக்ஸ் பாட்டு காப்பி அடிக்கிற மாதிரின்னு கொதிக்கிறாங்க... எல்லா காலத்திலயும் காப்பி அடிக்கிறது ஒரு கலையாவே இருந்துட்டு இருக்கு. விஸ்வநதாதன் அய்யா எவ்வளவு மேனாட்டு இசையை காப்பி அடிச்சிருக்கார்னு அவரையே கேட்டு பாருங்க... அவரே நிறைய பேட்டியில இதை ஒத்துக்கிட்டு இருக்கார்.. V.குமாரும், வேதாவும் காப்பி அடிக்காத இந்தி பாடல்களா?

 

நான் காப்பி அடிக்கிறதுக்கு ஆதரவா பேச நினைக்கலை.. எல்லா காலத்துலயும் இருந்து இருக்கு.. இப்பவும் இருக்கு.. என்னவோ இப்ப தான் புதுசா காப்பியடிக்கற கலாச்சாரம் வந்துட்ட மாதிரி ஓவரா சீன் போடறது நல்லாயில்லை.

 

ரீமிக்ஸ் பண்ற பாட்டுக்களோட உரிமைய வாங்கி ரீமிக்ஸ் பண்றாங்களா? இல்லை வெறும் நன்றின்னு டைட்டில்ல போடறதோட சரியான்னு தெரியலை...

 

ஒரு வேளை பாட்டு உரிமைக்கு பணம் ஏதாவது வேணும்னு தான் பழைய ஆளுங்க பிரச்சினை பண்றாங்களான்னு தெரியலை...